tamilnadu

img

வரதட்சணை கொடுமை: தாய் குழந்தை எரித்துக்கொலை செய்யப்பட்ட கொடூரம்

உத்தரபிரதேச மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் தாயும் குழந்தையும் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ஷப்னம் (25) மற்றும் முகமது காசிம் தம்பதியினர் கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஷப்னத்திடம் முகமது காசிமும், அவரது தாயும் ரூ.2 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். 
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, ஷப்னம் ஒரு பெண் குழந்தை பிறந்தது . அந்த சமயத்தில் ஷப்னத்தின் சகோதரரான ஜாஹித் அலி ரூ. 1 லட்சம் ரொக்கப்பணத்தை வரதட்சணையாக கொடுத்துள்ளார். ஆனால் தொடர்ந்து  காசிம் குடும்பத்தினர் ஷப்னத்திடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர்.
நேற்று முன்தினம் முகமது காசிமும், அவரது தாயாரும் சேர்ந்து ஷப்னம் மற்றும் அவரது 3 மாத பெண் குழந்தையை வீட்டிற்குள் வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்தனர். இதையடுத்து முகமது காசிம் மற்றும் அவரது குடும்பத்தினர் 7 பேர் வீட்டிலிருந்து தப்பி ஓடி தலைமறைவாகினர்.

தகவல் அறிந்த  சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் எரிக்கப்பட்ட உடல்களை மீட்டனர்.  முகமது காசிம் மற்றும் அவரது குடும்பத்தினர் 7 பேர் மீது போலீசார் கொலை மற்றும் வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இச்சம்பவம் குறித்து ராம்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் அஜய் பால் சர்மா கூறியதாவது:-
தப்பி ஓடிய குற்றவாளிகளை கைது செய்ய போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஆதாரங்களின் அடிப்படையில், தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 
 

;